மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக ளுக்கான இன்றைய ராசிபலன்…!!

மேஷம்

யோகமான நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உத்தியோக உயர்வு உண்டு. வருமானம் திருப்தி தரும்.

ரிஷபம்

வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மிதுனம்

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவு மற்றொரு வழியில் செலவாகும். குடும்பத்தினர் உங்கள் செயல்பாட்டில் குறை கண்டுபிடிப்பர்.

கடகம்

குடும்பச்சுமை கூடும் நாள். வரவைக்காட்டிலும் செலவு கூடும். பயணங்களால் விரயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

சிம்மம்

நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். குடும்ப முன்னேற்றம் கூடும். வரன்கள் வாயில் தேடிவரும்.

துலாம்

பகையான உறவுகள் நட்பாகும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிரடி மாற்றங்களை மேலதிகாரிகள் செய்வர்.

விருச்சிகம்

செல்வ நிலை உயரும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சொத்து விற்பனை சுமுகமாக முடியும்.

தனுசு

பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மகரம்

வருமானம் திருப்தி தரும் நாள். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

கும்பம்

தைரியமும், தன்னபிக்கையும் கூடும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்பு நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

மீனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறையும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்காது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *