நவராத்திரி வழிபாட்டில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் ஒன்பது வடிவங்களை (நவதுர்க்கை) மகிழ்விக்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மலர்களால் அர்ச்சனை செய்தும், நைவேத்தியம் படைத்தும் வழிபடுவது வழக்கம்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையை மகேஸ்வரி, கவுமாரி, வராகியாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியை மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை சரஸ்வதி, நரசிம்கி, சாமுண்டியாகவும் வழிபாடு செய்வர்.
இந்த ஒன்பது நாள் பூஜை வழிபாட்டின்போது, அம்பிகைக்கு உகந்த மலர்களையும், நைவேத்தியங்களையும் பார்ப்போம்.
மலர்கள்:-
முதல் நாள் – வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை
இரண்டாம் நாள் – மல்லிகை
மரிக்கொழுந்து, சம்பங்கி
மூன்றாம் நாள் – ரிக்கொழுந்து, சம்பங்கி
நான்காம் நாள் – ஜாதிமல்லி
ஐந்தாம் நாள் – பாரிஜாதம், முல்லை
ஆறாம் நாள் – செம்பருத்தி
ஏழாம் நாள் – மல்லிகை, முல்லை
எட்டாம் நாள் – ரோஜா
ஒன்பதாம் நாள் – செந்தாமரை, வெண்தாமரை
நைவேத்தியங்கள்
முதல் நாள் – வெண் பொங்கல்
இரண்டாம் நாள் – புளியோதரை
மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
நான்காம் நாள் – கதம்ப சாதம்
ஐந்தாம் நாள் – தயிர் சாதம்
ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
எட்டாம் நாள் – பாயசம்
ஒன்பதாம் நாள் – அக்காரவடிசல்