விதியை மீறி வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம்!!

விதியை மீறி வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

சென்னையில் பல்வேறு வாகனங்களில் ஊடகம், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐ கோர்ட் ,தலைமைச் செயலகம், ஆர்மி என பல்வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனை மற்றும் தணிக்கையின் போது பலர் போலியாக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே ஊடகம் , டாக்டர், வழக்கறிஞர் என தங்கள் துறை தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் மட்டும் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியதாக கடந்த| 5 நாட்களில் 1,022 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொருவருக்கும் தலா 7500 அபராதம் விதிக்கப்பட்டன என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *