இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்!!

வாஷிங்டன்:
இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சவார்த்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா சென்ற மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீரை சந்தித்து, ஒப்பந்தம் தொடர்பான நுணுக்கமான அம்சங்கள் குறித்து விவாதித்தார்.

நேற்று இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்கா, இந்​தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்​தாகும் என்று கூறினார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ, “அமெரிக்கா, இந்​தியா இடையே வர்த்​தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய பேச்சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வருகிறது.

சில விஷயங்களில் கருத்து வேறு​பாடுகள் நிலவுகின்றன. அவை களை​யப்​படும். வெகு விரைவில் அமெரிக்கா, இந்​தியா இடையே வர்த்​தக ஒப்பந்தம் கையெழுத்​தாகும்.

பல்​வேறு நாடுகளில் இருந்து கச்சா எண்​ணெயை இந்​தியா கொள்முதல் செய்து வரு​கிறது. இது மிகச் சிறந்த வணிக நடவடிக்கை ஆகும்.

கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு துறை​யில் இந்​தியா “சூப்​பர் பவ​ராக” உரு​வெடுத்​திருக்​கிறது.

வெனிசுலா நாட்டின் கச்சா எண்​ணெயை இந்​திய நிறுவனங்களுக்கு வழங்க தயாராக உள்​ளோம்.” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது. நாங்களும் இதை விரும்புகிறோம்.

ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு மிக நெருக்கத்தில் இருக்கிறோம். அமெரிக்கா இதுவரை செய்த ஒப்பந்தங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *