கடந்த கால ஆட்சியாளர்கள் மின் உற்பத்திக்கு தேவையான கட்டமைப் புகளை நமது மாநிலத்தில் சரியாக பராமரிக்க தவறியதே இன்று நம் மாநிலத்தில் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம் – எம்.பி துரை வைகோ !!

திருச்சி:
“கடந்த கால ஆட்சியாளர்கள் மின் உற்பத்திக்கு தேவையான கட்டமைப்புகளை நமது மாநிலத்தில் சரியாக பராமரிக்க தவறியதே இன்று நம் மாநிலத்தில் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம்” என எம்.பி துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தல் பொறுத்தவரை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருந்தது, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மீதமுள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும்.

தமிழகத்தை பொறுத்தவரை மின்சாரத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. ஏற்கெனவே தமிழக அரசுக்கு சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் சுமை உள்ளதால், எடுத்தவுடனேயே அதை குறைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இருப்பினும், துறை சார்ந்த அமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நிலையில், அது குறித்த விவரங்களை ஆராய வேண்டும். டெண்டர் முறைகேடுகள் இந்த ஆட்சியில் முற்றிலுமாகக் குறைந்துள்ளது. இது வருங்காலத்தில் தமிழ்நாட்டின் கடன் சுமையைக் குறைக்கும்.

சென்னையில் மழை வெள்ளப் பணிகளுக்காக கடந்த அரசு தரப்பில் 4,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப் பட்டாலும், அது சரியான முறையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

ஏறக்குறைய 24 கிலோ மீட்டர் தொலைவுக்கு மழைநீர்க் கால்வாய் வெட்டப்பட்டாலும், அதனை மற்ற கால்வாய்களுடன் இணைக்கும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாததால் அவை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று பல இடங்களில் இந்த பிரச்சினை உள்ளது.

கடந்த ஐந்து வருடத்தில் இவர்கள் (திமுக) என்ன செய்தார்கள் என தெரியவில்லை. மேலும், நிவாரணப் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்கள் களத்தில் நின்றனர். இதுபோன்ற நேரங்களில் உள்ளாட்சி அமைப்புகள் தான் களத்தில் நிற்க வேண்டும்.

ஆளுங்கட்சியின் கவுன்சிலர்கள், மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் உரிய முறையில் களத்திற்கு சென்று பொதுமக் களை சந்திக்கவில்லை. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள், அமைச்சர்கள் களத்தில் இருக்கும் பொழுது, கவுன்சிலர்கள் களத்தில் இல்லாததற்கு அரசியல் தான் காரணம்.

கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக மின் கட்டமைப்பில் முந்தைய அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்காததே தற்போதைய மின் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம்.

குறிப்பாக, உப்பூர் மின் திட்டத்திற்காக 13,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, அதில் 6,000 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் உப்புக்காற்று பட்டு வீணாகிவிட்டது.

வரும் 5 ஆண்டுகளில் இந்த சீர்கேடுகளை சரி செய்து மின்சார தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது தற்போதைய அரசின் கடமை.

அரசியல் ரீதியாக எதிர் தாக்குதல், கருத்தியல் ரீதியான மாற்று கருத்து கூறுவது ஜனநாயகத்தின் அடிப்படை. அதேவேளையில் தனி மனித தாக்குதல், கொச்சைபடுத்திப் பேசுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது இது போன்ற விஷயங்கள் ஏற்புடையதல்ல.

நாம் தமிழர் வேட்பாளர் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடலாம். நடிகர் தனுஷ் கட்சி தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை, அது அவரவர் உரிமை. இறுதி முடிவை எப்போதும் மக்கள் மட்டுமே தீர்மானிப் பார்கள்” என எம்.பி துரை வைகோ தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *