மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து!!

சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பணியாற்றிட எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும் திகழவும், தொடர்ந்து அர்ப்பணிப்புடன் தேசத்திற்குச் சேவை ஆற்றவும் வாழ்த்துகிறேன்.

நமது மகத்தான தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கான உங்கள் முயற்சிகளில் உங்களுக்குத் தொடர்ந்து வலிமையும் வெற்றியும் கிடைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பதிலும் அவர் ஆற்றி வரும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகள் மிகவும் போற்றத்தக்கவை.

அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் திகழவும், மக்கள் மற்றும் தேசத்திற்குத் தொடர்ந்து வலுவான சேவையாற்றவும் இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *