கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61 வது மல்கண்காட்சி நேற்று தொடங்கியது. மலர்கண்காட்சி வருகிற 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக மலர் கண்காட்சி இரண்டு நாட்கள் நடத்தப்படும் நிலையில் இந்த நாட்கள் 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதன் காரணமாக பூங்காவில் மேரி கோல்ட், லில்லியம், கேலண்டெல்லா ,சால்வியா, பேன்சி உள்ளிட்ட லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
மலர் கண்காட்சியில் 25 ஆயிரம் மலர்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மலர்களைக் கொண்டு நெருப்புக்கோழி, சேவல், மயில் ,மலர் வீடு, மலர் இதழ்கள் கொண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மலர் கண்காட்சியை ரசிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், கழிவறை வசதிகளை உரிய முறையில் ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்கான நேரம் அதிகரித்துள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இருந்த பார்வையாளர் நேரம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61ஆவது மலர் கண்காட்சி 27ஆம் தேதி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.