பொதுவாக சோம்பு நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது . இதன் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் பாக்கலாம்.
1.சோம்ப சாப்பிட்டால் மாதவிலக்குல ஏற்படும் வயிற்றுவலி குணமாகும்.
2.பெண்ணுக்கு கருப்பை பலப்படும்.
3.சோம்ப பொடி செஞ்சு தேனுடன் கலந்து (1கிராம்) சாப்பிட்டா கல்லீரலுக்கு பலம் கெடைக்கும்.மேலும் சோம்பின் பலன்களை பாப்போம்.
4.சிலருக்கு மூக்கில் நீர் வடியும் .அப்படிப்பட்டவர்கள் சோம்பு கசாயம் செஞ்சு குடிச்சு வந்தா வறட்டு இருமல், சரியாகும்.”
5.சோம்பை நீரில் போட்டு காய்ச்சி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால்மூக்கடைப்பு தூசி அலர்ஜிக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் கல்லிரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியம் உண்டாகும் .
6.சிலர் தூக்கமின்மை பிரச்சினையால் அவதி படுகின்றனர் ,அவர்கள் சோம்பு தண்ணீர் குடித்தால் அது மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்க படுகின்ற மெலட்டோனின் ஹார்மோனை சீராக சுரக்க செய்வதால் நமக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.