அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்ப்பதாக வரும் செய்திகள் துளியும் உண்மையில்லை – ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு பேட்டி!!

ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைக்க திட்டம் என பரவும் செய்தி வதந்தி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். அண்ணாமலை பேச்செல்லாம் பொய்யானது, அவர் கர்நாடகாவில் என்ன பேசினார் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும், தனது கட்சியோடு கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டையே பட்டா போட்டு தருவதாக கூறினார்கள்.

தேர்தலின்போது அதிமுகவுடன் யார் கூட்டணி பேசுகிறார்களோ அவர்களை டெல்லியில் இருந்துவந்து தூக்கிச்சென்றனர். ஆளுநராக்குகிறோம் ஒன்றிய அரசில் அமைச்சர் ஆக்குகிறோம் என்று சொல்லி இடையூறு செய்தனர்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்ப்பதாக வரும் செய்திகள் துளியும் உண்மையில்லை. மீண்டும் ஒரு விஷப்பரீட்சைக்கு அதிமுக தயாராக இல்லை. ஈபிஎஸ்-ன் ஒப்புதலோடு தெரிவிக்கிறேன். அதிமுக தனது வரலாற்றில் அதிக அளவில் வழக்குகளை சந்தித்ததில்லை.

அதிமுக ஏராளமான வழக்குகளை சந்திக்க வைத்தவர் ஓபிஎஸ். அவர் தனது சுய லாபத்துக்காக, பதவிக்காக அதிமுக மீது பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்துவந்தார்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *