“ராமர் கோவில் பூமி பூஜை” – “144” தடை உத்தரவு போட்ட கமிஷனர்…

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடக்க உள்ளது. அதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்த விழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரி வித்துள்ளது. ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடைபெற இருப் பதால் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.  இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு, கர்நாடக மாநிலத்தின் கல்புர்கியில் இன்று மதியம் 3 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்புர்கி நகர போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:-

அயோத்தி ராமர் கோவிலில் நடைபெற உள்ள பூமி பூஜையை முன்னிட்டு, கல்புர்கியில் இன்று மதியம் 3 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மேலும் இந்த உத்தரவு ஆகஸ்டு 6ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று கல்புர்கி நகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.