இளம் வயதில் கார்லஸ் அல்காரஸ் சாதனை!!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.

இதில் முன்னணி வீரர்களின் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் இருவரும் விடாப்பிடியாக நெருக்கடி கொடுத்து விளையாடினார்கள். ஆனாலும் கார்லஸ் அல்காரஸ் கடைசி இரு செட்களில் முன்னிலை வகித்தார்.

இறுதியில் அவர் 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் போட்டியில் 21 வயதில் க்ளே, கிராஸ் அண்ட் ஹார்ட் எனற மூன்று தளத்திலும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் நபர் கார்லோஸ் அல்காரஸ் ஆவார்.

இதற்கு முன் 2023 ஆம் ஆண்டில் விம்பில்டன் ஃபைனல் பட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டு யூ.எஸ் ஓபன் ஃபைனல் பட்டத்தையும் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *