எந்த வீரரும் யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை – சகிப் அல் ஹசன்!!

கிங்ஸ்டவுன்:
டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது, அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் 46 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய ஜாம்பவான் சேவாக் ஷகிப் அல் ஹசன் அதிக அனுபவங்களை கொண்ட வீரர். வங்கதேச அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டுள்ளார்.

ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஷகிப்பின் செயல்பாடுகள் மோசமான இருந்துள்ளன. இதனை நினைத்து அவர் வெக்கப்பட வேண்டும். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று காட்டமாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் ஷகிப் அல் ஹசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் சேவாக்கின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஷகிப் அல் ஹசன், எந்த வீரரும் யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீரரின் பணி என்னவென்றால், அணியின் வெற்றிக்கு உதவுவது தான்.

பேட்ஸ்மேனாக, பவுலராக, ஃபீல்டராக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற வைக்க வேண்டும்.

மற்றபடி யாருக்கும் பதிலளிக்க தேவையில்லை. அதேபோல் ஒரு வீரரால் அணியின்வெற்றிக்கு பங்களிக்க முடியவில்லை என்றால், நிச்சயம் சில விவாதங்கள் வரும். அதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் எனது ஆட்டம் குறித்து நான் எப்போதும் கவலைக் கொண்டதில்லை.

என் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே அப்படி தான் இருந்திருக்கிறேன். கிரிக்கெட்டில் ஒருநாள் உங்களுக்கான நாளாக இருக்கும். மற்றொரு நாள் இன்னொரு வீரருக்கான நாளாக இருக்கும். நன்றாக பவுலிங் செய்வதே எனது பணி. விக்கெட் வீழ்த்துவதற்கு கொஞ்சம் அதிர்ஷடமும் தேவை என்று நினைப்பதாக என்று தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *