கோவை கொடிசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழா – பிரமாண்ட ஏற்பாடுகள்!!
கோவை கொடிசியா மைதானத்தில் திமுகவின் முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெற்றிக்காக பாடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு என முப்பெரும் விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

40 தொகுதி எம்.பிக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் இதில் பங்கேற்க உள்ளனர். திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.▪️தமிழ்நாடு முழுவதில் இருந்தும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அனைத்துக் கழக மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைமை கழகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.