திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் விழாவில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையினை வெளியிட்டார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினை வெளியிடப்பட்டு 30 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழ்நாடு பல்வேறு விளையாட்டுகளில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தவும் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளை பிரிதிபலிக்கவும் தமிழ்நாட்டின் வரைபடத்தை உள்ளடக்கிய புதிய இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய இலச்சினையில் இடம்பெற்றிருக்கும் மஞ்சள் நிறம் ஆற்றல் மற்றும் விளையாட்டு ஆர்வத்தையும், நீல நிறம் சுதந்திரம் மற்றும் உத்வேகத்தை குறிக்கும் வகையிலும் இடம் பெற்றுள்ளது. மேலும் இலச்சினையைச் சுற்றி அமைந்துள்ள வட்ட வடிவம் தமிழ்நாடு விளையாட்டுத் துறை முன்னேற்றத்தின் சான்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., திருப்பூர் மாநகராட்சி மேயர் திரு. ந. தினேஷ்குமார், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.சுப்புராயன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் பி. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. செல்வராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜே. மேகநாத ரெட்டி. இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் திரு தா. கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருமதி.கோ.மலர்விழி, சர்வதேச தடகள வீரர் ஒலிம்பியன் திரு. தருண் அய்யாசாமி, தேசிய தடகள வீராங்கனை செல்வி. ஆர். பிரவீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *