”ராதா மோகன் இயக்கும் முதல் வெப் தொடர் – சட்னி சாம்பார்” டீசர் வெளியீடு!!

2007 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மொழி. இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. படம் முழுக்க பேசாமல் தன்னுடைய முக பாவனையிலேயே மக்கள் மனதை கட்டிப் போட்டார் ஜோதிகா.

அதைத் தொடர்ந்து திரிஷா நடிப்பில் அபியும் நானும் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது. அதற்கடுத்து நாகர்ஜூனா நடிப்பில் பயணம் திரைப்படத்தை இயக்கினார்.

கடந்தாண்டு எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான பொம்மை திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்பொழுது ராதா மோகன் சட்னி சாம்பார் எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருடன் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளார். மேலும் கயல் சந்திரன், நிதின் சத்யா, தீபாசங்கர், சம்யுக்தா விஸ்வநாத், சுந்தர் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். வாணி போஜன் இதற்கு முன் ராதா மோகன் இயக்கத்தில் மலேசியா டூ அமினிசியா என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

ராதா மோகன் இயக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாலியான குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகியுள்ள இந்த தொடரின் முதல் தோற்றத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட சூழ்நிலையில் தற்பொழுது தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

அமுதா கஃபே நடத்தி வரும் ஒரு குடும்பம் அந்த ஹோட்டலில் சாம்பார் மிகவும் ஃபேமசாக இருக்கிறது. அந்த சாம்பார் ருசிக்கு காரணம் யோகி பாபுவின் கைப்பக்குவம், மற்றொரு நண்பர்கள் நட்த்தும் ஹோட்டலில் சட்னி மிகவும் ஃபேமசாக இருக்கிறது.

இதனால் இவர்கள் இருவரும் அவர்களில் ரெசிப்பியை மாற்றிக் கொள்ள முடிவெடுத்து யோகி பாபுவிடம் கேட்பது போன்ற காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. விரைவில் ரிலீய்ஸ் நீதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *