இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “தங்கலான்.” மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் நாளை (ஜூலை 10) வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.
முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. டிரைலருடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.