யோகி பாபு நடிக்கும் `போட்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!!

வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.

கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இக்கதை சூழல் 80 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.

இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் முதல் பாடலான `சோக்கா நானும் நிக்கிறேன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இப்பாடலின் வரிகளை கோல்ட் தேவராஜ் எழுதியுள்ளார். பத்ம பூஷன் விருது பெற்ற சுதா ரகுநாத் இப்பாடலை பாடியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *