சுனாமி பேரழிவின் 19 ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட முறையான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் – தினகரன் ட்வீட் !!

சுனாமி பேரழிவின் 19 ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட முறையான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் – தினகரன் ட்வீட் !!

சுனாமி பேரழிவின் 19 ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இயற்கையின் இரக்கமற்ற நியதியால் உருவான சுனாமி எனும் ஆழிப்பேரலையால் உயிர்நீத்த நம் சொந்தங்கள் அனைவரின் 19 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று.

ஒவ்வொரு ஆண்டும் சுனாமி தினத்தன்று அஞ்சலி செலுத்துவதோடு நின்று விடாமல், புயல், கனமழையால் இன்றவுளவும் அச்சுறுத்தப்பட்டு வரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட முறையான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply