குப்பையில் இருந்த பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது குப்பையில் இருந்த பாம்பு கடித்ததில் காசியம்மாள் (50) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
பாம்பு கடித்தவுடன் உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.