நான் சில ரகசியங்களை அவிழ்த்து விட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறை செல்ல வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்!!

நான் சில ரகசியங்களை அவிழ்த்து விட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறை செல்ல வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்!!

ஆட்சியில் இருந்தபோது கோப்புகள் என்னிடம் வந்து செல்லும், அந்த ரகசியங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறை செல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

கோயம்புத்தூரில் ஓ.பன்னீர்செல்வம் ஆதார்வாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இந்த இயக்கதினை அழிக்க எதிர்கட்சிகள் சதி செய்தன. ஆனால் இந்த இயக்கத்தை வலுவானதாக ஜெயலலிதா மாற்றினார். மற்ற மாநிலங்கள் பார்த்து பார்த்து வியக்கும் ஆட்சியை ஜெயலலிதா கொடுத்தார்.

புரட்சி தலைவி மறைவிற்கு பின்னர் அவர்கள் கட்டி காப்பாற்றிய சட்டவிதிகள், அதிமுக தலைமை பொறுப்பிற்கு யார் வர வேண்டும் என்ற விதிகளை தூக்கி போட்டு விட்டனர். அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் , மன்றாடி கேட்டு கொண்டதால் கழகத்தை அப்போது மீண்டும் இணைத்தோம். நிரந்தர பொதுச்செயலாளர் என்ற உச்சபட்ச நிலையை ஏற்படுத்தினோம்.

கழகத்தின் பொருளாளராக 12 ஆண்டுகள் இருந்தவன் நான். அப்போது இரண்டு கோடி ரூபாய் கழகம் கடனில் இருந்தது. நான் பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் 4 கோடி ரூபாய் வருவாயாக உயர்த்தினேன் .

அப்பொழுது அம்மா அவர்கள் பல்வேறு வழக்குகள் மற்றும் பிரச்சனைகள் காரணமாக, நிதி நெருக்கடியில் இருப்பதாக என்னிடம் தெரிவித்த நிலையில், புரட்சி தலைவி அம்மாவுக்கு 2 கோடி ரூபாய் தந்து அம்மாவுக்கு உதவியவன் நான், எங்களை கழகத்தில் இருந்து வன்முறையாக வெளியேற்றி விட்டனர். சசிகலா உங்களுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தார்கள். அவர்களை நீங்கள் என்ன வார்த்தையில் பேசுனீர்கள்.

11 எம்.எல்.ஏ ஆதரவுடன் இருந்த நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்து இருந்தால் ஆட்சி போயிருக்கும். நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும், கட்சியும் காப்பாற்ற பட்டது.

தவறான வழியில் சென்ற போது எச்சரித்தேன். ஆனால் அதிகார போதை, பணத்திமிரில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அதனால் ஆட்சி போனது, அடுத்தடுத்து தேர்தல்களிலும் தோற்று போனது. ஈரோடு இடைதேர்தலில் தனியாக நின்றால் ஓட்டுக்கள் பிரியும்.

வாபஸ் வாங்கிடுங்கள் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார். அதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாபஸ் வாங்கிட்டேன். ஆனால் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஈரோட்டில் தோற்று போனது. இந்த தேர்தல்களில் தோற்று போனதால் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம்.

ஆட்சியில் இருந்தபோது கோப்புகள் என்னிடம் வந்து செல்லும், அந்த ரகசியங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறை செல்ல வேண்டும்” என்றார்.

Leave a Reply