”அண்ணாமலைக்கு” கனிமொழி பதிலடி!!

கலைஞரின் நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து அஞ்சலி செலுத்தினார் கனிமொழி.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதை அடுத்து கலைஞரின் நினைவிடத்தில் சான்றிதழை வைத்து கனிமொழி அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது ஒரு கேள்வி கேட்பார்.

இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக தற்போது அவருக்கு பதில் சொல்கிறேன். இந்த தகுதி கூட இல்லாத ஒரு நபர் பாஜகவிற்கு தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல .

தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை; தாமரை மலராது என மக்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர் என்றார்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 5 லட்சத்து 40 ஆயிரத்து 729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைய செய்துள்ளார். சிவசாமி வேலுமணி வெறும் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 991 வாக்குகள் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *