தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார் அவருக்கு வயது 71. பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை கழகம் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார் நுரையீரல் அழற்சி காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விஜயகாந்தின் மரணச் செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply