விஜய்காந்தின் உடலை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி அவருக்கு முத்தமிட்டு அஞ்சலி!!

விஜய்காந்தின் உடலை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி அவருக்கு முத்தமிட்டு அஞ்சலி!!

நடிகரும் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி நடிகர்களான, ரஜினி, விஜய், குஷ்பு என பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் சென்னை, அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள.

தொடர்ந்து இவரது உடல் மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தே.மு.தி.க. அலுவலகத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் ஆண்டனி நேரில் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கிக் கொண்ட விஜய் ஆண்டனி தடுப்புகளில் ஏறி குதித்து வந்தார்.

விஜய்காந்தின் உடலை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி அவருக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தினார்.

அனைவரும் மாலை அணிவித்து, தொட்டு கும்பிட்டு மரியாதை செலுத்திய நிலையில் விஜய் ஆண்டனி முத்தமிட்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Leave a Reply