பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு அடுத்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று நடப்பாண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரும் இளம் விளையாட்டு வீரர்களும், தங்கள் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்த இந்த விளையாட்டுகள் ஒரு தளமாக செயல்படும். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது அனைவரும் கண்டது போல், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை பிரதிபலிக்கும் வகையில் கம்பீரத்துடன் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்படி சென்னையில் ஜன.19 முதல் 31 வரை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் டெல்லி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் கேலோ இந்தியா போட்டியின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பிதழ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply