7 ஆண்டுகளுக்கு பின் மாயமான விமானம் கண்டுபிடிப்பு!

7 ஆண்டுகளுக்கு பின் மாயமான விமானம் கண்டுபிடிப்பு!

2016 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து அந்தமான் தலைநகர் போர் பிளேர் சென்ற ஏஎன் 32 விமானம் வங்காள விரிகுடா மீது பறந்த போது திடீரென மாயமானது.

புறப்பட்ட 42 நிமிடங்களில் விமானம் மறைந்த நிலையில் அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2016ம் ஆண்டு, தூத்துக்குடி வீரர் உள்பட 29 பேருடன் மாயமான AN32 ரக சரக்கு விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகே கடற்பகுதிக்குள் 310 கி.மீ. தொலைவில், 3.40 கி.மீ. ஆழத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானம் கடலில் விழுந்தது எப்படி? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply