கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி; தமிழ்நாடு அணி இன்று ஒரே நாளில் 6 தங்க பதக்கங்களுடன் முதலிடம்!!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி; தமிழ்நாடு அணி இன்று ஒரே நாளில் 6 தங்க பதக்கங்களுடன் முதலிடம்!!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகள் பதக்கங்களை குவித்து வருகிறது. தமிழ்நாடு அணி இன்று ஒரே நாளில் 6 தங்கம் உட்பட மொத்தம் 14 பதக்கங்களை வென்றுள்ளது.

சென்னை நேருபார்க் ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் மகாராஷ்டிரா வீராங்கனை நிருபாமா துபேவை வீழ்த்தி தமிழ்நாடு வீராங்கனை பூஜா ஆர்த்தி தங்கம் வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் தீபிகா, ஷமினா ஆகியோரும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சந்தேஷ். ஹரிஹந்த் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டியில் டிராக் சைக்கிள் பந்தயத்தில் 10 கி.மீ மகளிர் பிரிவில் தமிழரசியும், 2 கி.மீ மகளிர் பிரிவில் தன்யதா தங்கமும், ஸ்பிரின்ட் பிரிவில் ஸ்ரீமதி வெள்ளி பதக்கமும் வென்றனர்.

வேளச்சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வைஷ்னவி, விராஜ் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட artistic pair யோகா பெண்கள் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனைகள் பெட்ராசிவானி, மேனகா இணை தங்கப்பதக்கமும், ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு வீரர்கள் மோனிஷ் மகேந்திரன், கபிலன் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற தடகள போட்டியில் ஆடவர் 110 மீ பிரிவில் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்னு தங்கம் வென்றார்.

இதேபோல் ஆடவர் பிரிவு 400 மீ ஓட்டத்தில் தமிழ்நாடு வீரர் சரண் தங்கம் வென்றார். ஆடவர் போல்வால்ட் பிரிவில் தமிழ்நாடு வீரர் கவின்ராஜ் வெண்கலம் வென்றார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டினார்.

கடந்த 5 நாட்களாக பதக்க பட்டியலில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளி 13 தங்க பதக்கங்களுடம் மகாராஷ்டிரா அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 12 தங்க பதக்கத்துடன் தமிழ்நாடு அணி இரண்டாவது இடத்திலும் 7 தங்க பதக்கத்துடன் டெல்லி அணி 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply