மதுரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும் பலி!!

விருதுநகர் திருமங்கலம் சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குலதெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய தளவாய்புரத்தை சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் பலியான ஐந்து பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கார் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுமி மரணமடைந்துள்ளார்.

காயமடைந்த 10 வயது சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவரக்கோட்டை அருகே நான்கு வழிச்சாலையில் டூ வீலர் மீது கார் மோதி விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும், டூ வீலரில் சென்றவரும் உயிரிழந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *