தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனையான தங்கை தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனையான தங்கை தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!!

சைக்கிள் பந்தய வீராங்கனையான தமிழரசிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனையான தங்கை தமிழரசி, இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்று 3 பதக்கங்களை வென்று நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அண்மையில் நடந்த கேலோ இந்தியா போட்டியிலும் தனது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வசப்படுத்தினார்.

தங்கையின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஏதுவாகவும், Carbon Track Bike (cycling equipment) மற்றும் அதற்கு தேவையான கூடுதல் உபகரணங்களை வாங்குவதற்காக ரூ.16.16 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து இன்று வழங்கினோம்.

சர்வதேசப் போட்டிகளிலும் வெற்றி கண்டு தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு முன்மாதிரியாக திகழ தங்கை தமிழரசியை வாழ்த்தி மகிழ்ந்தோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply