‘’நயன்தாரவுடன்’’ புதிய படத்தில் இணையும் கவின்!!

தமிழ் திரைத்துறையில் அடுத்து வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ‘நட்புனா என்ன தெரியுமா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பிறகு கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக் பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

பிக்பாஸிற்கு பிறகு ‘லிஃப்ட்’ என்ற படத்தில் நடித்தார். ஓடிடியில் மட்டும் வெளியான லிஃப்ட் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


சமீபத்தில் இளன் இயக்கத்தில் கவின் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக கவின் நடன இயக்குநரான சதீஷ் இயக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் ப்ளடி பக்கர் என்ற திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அசோசியேட்டான விஷ்னு எடவன் இயக்கும் முதல் படத்தில் கவின் நடிக்கவுள்ளார் என்றும் இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள் ளதாகவும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கவுள்ளது எனவும் செய்திகள் வெளியானது.


வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *