தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 234 தொகுதி க்கும் மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டம்!!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 234 தொகுதிக்கும் மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மாநாட்டை நடத்தி முடித்த நிலையில், உறுப்பினர் சேர்க்கையில் கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜய், கட்சிக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், வரும் தேர்தலுக்கு முன் கட்சியைப் பலப்படுத்தவும் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ள விஜய், அதற்கான பட்டியலையும் தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, 120 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்திருப்பதாகவும், டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்களை நியமிக்கவும் விறுவிறுப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பெரிய மாவட்டத்துக்கு மட்டும் 2 அல்லது 3 மாவட்ட செயலாளர்கள், 3 ஒன்றிய செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தவகையில் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் நியமிப்பது தொடர்பாக, தினந்தோறும் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்தவகையில், நேற்று செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கடுமையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்..

அதுமட்டுமில்லாமல், தவெக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தொடர்பாகவும் நிர்வாகிகளுக்கு பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *