பாஜக மட்டும் இல்லையெனில் அதிமுக எதிர்க்கட்சியாககூட இருந்திருக்க முடியாது – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!!

பாஜக மட்டும் இல்லையெனில் அதிமுக எதிர்க்கட்சியாககூட இருந்திருக்க முடியாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜக 4 எம்.எல்.ஏக்களை வென்றதற்கு அதிமுகதான் காரணம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதற்கு பதில் அளித்துள்ள மத்திய இணையமைச்சர், “பாஜக மட்டும் இல்லையெனில் அதிமுக எதிர்க்கட்சியாககூட இருந்திருக்க முடியாது. பாஜக வாக்குகளை மாநிலம் முழுவதும் அதிமுக வாங்கியுள்ளது.

யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்ய அரசியல் ஒரு களமாக இருக்கிறது. ஆகவே அந்த களத்திற்கு வரும் விஜய்க்கு வாழ்த்துக்கள். அவரை வரவேற்கிறோம்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது மாநில அரசுகள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காததால்தான் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *