மகளின் பாஸ்போர்ட்டில் கையெழுத்திட மறுத்த முகமது ஷமி…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி. இவர் தனது மனைவியான ஹசின் ஜஹானை பிரிந்து வாழ்கிறார். இவர்களுக்கு ஆயிரா என்ற பெண் குழந்தை உள்ளது. ஆயிரா சில தினங்களுக்கு முன் முகமது ஷமியை சந்தித்தார். அப்போது அவர் ஷாப்பிங் அழைத்துச் சென்றார். அவருக்கு ஷூ வாங்கிக் கொடுத்தார்.

ஷாப்பிங் சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகமது ஷமி பகிர்ந்தார். அதில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளை மீண்டும் பார்த்தபோது என்னுடைய நேரம் நின்றது. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு உன்னை நேசிக்கிறேன்” அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் முகமது ஷமியின் முன்னாள் மனைவி, பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆயிரா முகமது ஷமியை சந்தித்தது குறித்து ஹசின் ஜஹான் கூறியதாவது:-

ஆயிராவுடன் முகமது ஷமி ஷாப்பிங் சென்றது ஜஸ்ட் வெளிக்காட்டிக் கொள்வதற்காகத்தான். என்னுடைய மகள் பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டது. புதிய பாஸ்போர்ட்டுக்கு முகமது ஷமியின் கையெழுத்து தேவை. இதனால் அவரது தந்தையை சந்திக்க சென்றாள்.

ஆனால், முகமது ஷமி கையெழுத்திடவில்லை. அவர் என்ளுடைய மகளுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். அந்த நிறுவனம் ஷமி விளம்பரத்தில் நடிக்கும் நிறுவனம். இதனால் அங்கு அழைத்து சென்றுள்ளார்.

அந்த கடையில் என்னுடைய மகள் ஷூ மற்றும் ஆடைகள் வாங்கியுள்ளார். அங்கு எது வாங்கினாலும் முகமது ஷமி பணம் செலுத்த வேண்டியதில்லை. இதனால் அங்கே அழைத்துச் சென்றுள்ளார். என்னுடைய மகள் விரும்பிய கித்தார் மற்றும் கேமரா. இதை அவர் வாங்கிக் கொடுக்கவில்லை.

என் மகளைப் பற்றி விசாரித்ததே கிடையாது. ஷமி அவருடைய விசயத்திலேயே பிஸியாக இருக்கிறார்.

அவர் ஒரு மாதத்திற்கு முன்பு அவளை சந்தித்தார். ஆனால் பின்னர் எதையும் வெளியிடவில்லை. இப்போது பதிவு செய்ய எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். எனவே அவர் இந்த வீடியோவைப் பதிவேற்றினார்

இவ்வாறு ஹசின் ஜஹான் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *