சாம்பியன்ஸ் டிராபிக்கான வாய்ப்பு குறித்து தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி வெளிப்படையாக பேச்சு!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகினார். இதனால் அவருக்கு பதிலாக கடைசியாக இடம் பிடித்தவர் வருண் சக்கரவர்த்தி.


சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்தியா, இங்கிலாந்துடன் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தை வருண் ஈர்த்தார். இதனையடுத்து ஒருநாள் தொடரில் இடம் கிடைத்தது. ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.

அதனை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்தார். ஆனால் லீக் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது கடினம் என பேசப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை நாக் அவுட் போட்டிகளில் களமிறங்கி அசத்தினார்.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான வாய்ப்பு குறித்து தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முடியும்போது சென்னைக்கு செல்ல இருந்தேன். அப்போது நான் ஒருநாள் தொடரிலும் விளையாட வேண்டும் என்றனர். பின் ஒருநாள் தொடர் முடிந்து வீட்டிற்கு கிளம்பலாம் என இருந்தபோது சாம்பியன்ஸ் டிராஃபியில் விளையாட துபாய் செல்ல போகிறோம் என்றனர்.

இப்போது கோப்பையை வென்றுவிட்டோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இவ்வாறு வருண் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *