கை தட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் மேடைகளில் பேசுபவர்களுக்கு பலத்த கை தட்டல்கள் பாராட்டாக கிடைக்கும்.

அப்படி கை தட்டுவது கூட ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்காக மருத்துவ உலகில் `கிளாப்பிங் தெரபி’ என்னும் சிகிச்சை முறையே இருக்கிறது.

தினமும் கை தட்டுவதற்கு சில நிமிடங்களை ஒதுக்குமாறு அந்த சிகிச்சை பரிந்துரைக்கிறது. சரி, கை தட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

  • இரண்டு உள்ளங்கைகளிலும், 30-க்கும் மேற்பட்ட அக்குபிரசர் புள்ளிகள் உள்ளன. கை தட்டும்போது அவைகள் தூண்டப்பட்டு ஏராளமான நன்மைகளை அளிக்கின்றன.
  • மன அழுத்தம், பதற்றத்தை கட்டுப்படுத்தி மன ஆரோக்கியத்துக்கும் நலம் பயக்கும்.
  • மகிழ்ச்சிக்கான சமிக்ஜைகள் பரவி, மனச்சோர்வை தடுக்க உதவும்.
  • குழுவாக சேர்ந்து கை தட்டும் வழக்கத்தை பின்பற்றுபவர்களிடத்தில் மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • ரத்த அழுத்த அளவை ஒழுங்கு படுத்த உதவும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் மேம்படுவதற்கும், இதய நோய் அபாயத்தை குறைப்பதற்கும் வித்திடும்.
  • வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.
  • குழந்தைகள் கை தட்டுதல் பயிற்சியை தொடர்ந்து பின்பற்றும்போது அறிவாற்றல் திறன் மேம்படும். ஞாபக சக்தியும் கூடும். கவனச்சிதறலும் கட்டுப்படும்.
  • உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை, தலைவலி, ஜலதோஷம், கண் சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றின் வீரியத்தைகுறைப்பதற்கும் உதவும்.
  • உள்ளங்கைகளில் சிறிதளவு கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்தும் கை தட்டலாம்.
  • காலைவேளையில் இந்த வழக்கத்தை தொடர்வது நல்ல பலனை கொடுக்கும்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *