விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத் தொகுப்பை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் விருந்தினர் மாளிகையில், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மின்கம்பங்கள் வீழ்ந்ததையொட்டி, மின்கம்பங்கள் அமைத்திடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது இதுவரை கண்டிராத மழையை விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளகுறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் கண்டுள்ளன.
மற்ற மாவட்டங்களும் வழக்கத்தை விட அதிக மழையை எதிர்கொண்டன. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு 493 மீட்புக் குழு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.