இசுசு மோட்டார்ஸ் நடத்தும்‘ இசுசு ஐ கேர் விண்டர் கேம்ப்’; டிசம்பர் 9 ந்தேதி முதல் 14 -ந் தேதி வரை நடக்கிறது!!

கோவை ,டிசம்பர்
இசுசு மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது இசுசு டி மேக்ஸ் பிக் அப்ஸ் மற்றும் எஸ் யு வி வாகன வரிசைகளுக்கு நாடுதழுவிய அளவில் ‘இசுசு ஐ கேர் விண்டர் கேம்ப்’ ஒன்றை நடத்துகிறது.

இந்த குளிர் காலத்தின் போது நாடுமுழுவதிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையிலான கூடுதல் பலன்கள் மற்றும் முன் தடுப்பு பராமரிப்பு சரிபார்ப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் எந்த ஒரு பிரச்சினையுமில்லாத ஓட்டுனர் அனுபவத்தை அவர்களுக்கு வழங்குவதை இந்த சேவை முகாம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது .

இசுசு கேர் பிரிவின் முன் முயற்சியில் மேற்கொள்ளப்படும் இந்த விண்டர் கேம்ப், டிசம்பர் 09 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இசுசு அங்கீகாரம் பெற்ற அனைத்து விற்பனையாளர்களின் சேவை மையங்களிலும் நடைபெறும்.

இந்த சேவை காலத்தின் போது வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு தேவையான சிறப்பு சலுகைகளையும் பலன்களையும் கூடுதலாகப் பெற்று பயனடையலாம்.

இந்த சேவை முகாமுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் வாகனத்தின் 37- முக்கிய இயக்கப்புள்ளிகள் முழுமையாக இலவச சரிபார்ப்பு , தொழிலாளர் கட்டணத்தில்* 10% தள்ளுபடி , உதிரி பாகங்களுக்கு * 5% தள்ளுபடி , சில்லறை ஆர்எஸ்ஏ வாங்குதலில் 10% தள்ளுபடி, இலவச ரெஜிஸ்ட்ரேஷன் பலன்களைப் பெறுவார்கள்.

இந்த விண்டர் கேம்ப் இசுசுவின் அங்கீகாரம் பெற்ற சேவை வசதி மையங்கள் அமைந்துள்ள அகமதாபாத், பாரமுல்லா, பெங்களூரு, பாண்டுப் (மும்பை), கோழிக்கோடு, சென்னை, கோயம்புத்தூர், திமாபூர், துர்காபூர், காந்திதாம், கோரக்பூர், குருகிராம், குவஹாத்தி, ஹிசார், ஹுப்பள்ளி, ஹைதராபாத், இந்தூர், இட்டாநகர், ஜெய்ப்பூர், ஜெய்கான், ஜம்மு, ஜலந்தர், ஜோத்பூர், கர்னால் , கொச்சி, கோலாப்பூர், கொல்கத்தா, கர்னூல், லக்னோ, LB நகர் (ஹைதராபாத்), லே, மதுரை, மண்டி, மங்களூர், மெஹ்சானா, மொஹாலி, மும்பை, மைசூர், நாக்பூர், நாசிக், புது தில்லி, நொய்டா, நெல்லூர், பாட்னா, புனே, ராய்ப்பூர், ரத்னகிரி, ராஜமுந்திரி, ராஜ்கோட், சதாரா, ஷிவமோக்கா, சிலிகுரி, ஷோலாப்பூர், சூரத், திருநெல்வேலி , திருப்பதி, திருச்சி, திருவனந்தபுரம், வதோதரா, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய அனைத்து நகரங்களிலும் நடைபெறும்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *