சென்னை;
திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தந்தை பெரியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. பெரியாரின் நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து சென்னையில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலக திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கைத்தடியை பரிசாக வழங்கினார்.
இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும் என கூறினார்.