புரட்சித்தலைவர் அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திட உறுதி யேற்போம் – எம்.ஜி.ஆரின் நினைவிட த்தில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி !!

சென்னை;

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எ.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதில் அதிமுக மூத்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதனிடையே எம்.ஜி.ஆர் நினைவுதினத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் கொள்கைகளை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த பேரலை, அண்ணா விட்டுச் சென்ற திராவிடக் கனவை ஏந்தி நின்று, மக்களுக்கான இயக்கமாம் அதிமுக கண்டு, அனைவரும் அனைத்தும் பெறும் நல்லாட்சிக்கான இலக்கணம் வகுத்த நம் ஒப்பற்ற தலைவர்,ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திராவிட நாயகர், நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளான இன்று, மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழும் நம் உயிர்நிகர் தலைவரின் பெரும்புகழைப் போற்றி வணங்கி, புரட்சித்தலைவர் அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திட உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *