”ஆண் குழந்தையை பெற்றெடுத்த அமலா பால்”!! தம்பதிக்கு வாழ்த்துகளை குவித்த ரசிகர்கள் !!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அமலாபால். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.

கர்ப்பிணியாக கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கர்ப்பகால உடற்பயிற்சிகள் செய்வது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.

கர்ப்பமடைந்து எட்டாவது மாதம் தொடங்க உள்ள நிலையில் அமலா பாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெற்றது.

தொடர்ந்து, தனது 9வது மாதத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், அமலாபால் கடந்த 11ம் தேதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அமலா பால் மற்றும் குழந்தைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் தான், “”It’s a boy” !! Meet our little miracle, “ILAI” ?? born on 11.06.2024″ என பதிவிட்டுள்ளார்.

இந்த நற்செய்தியை அறிந்த ரசிகர்கள் அமலா பால் தம்பதிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *