சென்னை:
கைதான ஞானசேகருக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சட்ட துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான ஞானசேகர், உதயநிதி – மாசுப்பிரமணியன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எதிர்க்கட்சிகள் பகிரும் நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, கைதான ஞானசேகருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த புகைப்படத்தை நீங்க பாத்தீங்கன்னா, துணை முதல்வருக்கும் அந்த நபருக்கும் இடையில் ஒரு gap இருக்கும்.
நாங்க ஒரு இடத்துக்கு போறோம்னா, பக்கத்துல யார் வற்றாங்க, எதிர்ல யார் வர்றாங்கணு பார்த்து, கூட நின்று செல்ஃபி எடுக்கிறவங்கலெல்லாம் தடுக்க முடியாது.
அந்த நபர் சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்தவர். அங்கு மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க யார் வேணாலும் வரலாம். அந்தளவுக்கு நிறைய உதவி பண்ணிருக்கார். இதலாம் யாரும் தடுக்க முடியாது.
எனக்கே ஒருத்தர் சால்வை போர்த்தி ஃபோட்டோ எடுத்தாலும் அதை நான் தவிர்க்க முடியாது. அப்படி செஞ்சா, ‘தொண்டரை தள்ளிவிட்ட அமைச்சர்’னு அதை ஒரு செய்தி ஆக்கிடுவிங்க என கூறினார்.