ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!

சென்னை :
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.

இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யா பாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் – திவ்யா பாரதி நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தற்பொழுது வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படம் இந்தியாவில் உருவாகும் முதல் கடல் ஃபேண்டசியை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படமாகும். திரைப்படத்தின் டீசர் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ஜிவி. பிரகாஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *