காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சிவகங்கை :
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திமுக ஆட்சியில் தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி திமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் முறையாக செயல்படுத்தப் படுகிறதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவ்வபோது ஆய்வு செய்து வருகிறார்.

கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இன்று சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் கள ஆய்வில் ஈடுபடுகிறார். சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு செய்யும் முதலமைச்சர் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதோடு, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *