போதைப் பொருள் கடத்தல் நபருடன் நெருக்கமாக உள்ள உதயநிதி விரைவில் சிறைக்கு செல்வார் – எடப்பாடி பழனிசாமி !!

போதைப் பொருள் கடத்தல் நபருடன் நெருக்கமாக உள்ள உதயநிதி விரைவில் சிறைக்கு செல்வார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வதற்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். உதகை, கோவை மாவட்டம் காரமடை ஆகிய இடங்களில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட போது, “திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் போதை பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஆகியோருடன் அந்த நபர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் நபருடன் நெருக்கமாக இருந்ததற்காக உதயநிதி ஸ்டாலின் விரைவில் கைது செய்யப்படுவார். இது தேர்தல் நடப்பதற்கு உள்ளாகவே நடந்து விடும்.

அதிமுக ஆட்சியைப் பார்த்து இருண்ட ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. மாநிலத்தின் சட்ட ஒழுங்குக்கு கேடு விளைவித்துள்ள ஆட்சி. எனவே மக்களவைத் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்க வேண்டும். அதிமுகவை முடக்க சதி செய்ய முன்பு எட்டப்பர்கள் இருந்தார்கள். இன்று அவர்கள் முகவரி தெரியாமல் போய்விட்டார்கள்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *