ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் இல்லை என்று ஒருநாள் போட்டியில் இருந்து நேற்று திடீரென ஓய்வை அறிவித்த ஸ்டீவ் சுமித்!!

துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடத்தப்பட்டது.

ஒரே மைதானத்தில் (துபாய்) விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமானது என்று கடுமையான விமர்சனம் எழுந்தது.

இந்த விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள், மைக் ஆதர்டன், நாசர் உசேன் கூறி இருந்தனர். இதேபோல ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சும் ஒரே மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு உகந்தது என்று தெரிவித்து இருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி போட்டி முடிவில் இந்த விமர்சனங்களுக்கு பயிற்சியாளர் காம்பீர் பதிலடி கொடுத்தார்.

துபாய் பொதுவான மைதானம் என்றும், இந்திய மைதானம் இல்லை என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில் ஒரே மைதானத்தில் ஆடுவது உதவிகரமாக இருப்பதாக வேகப்பந்து வீரர் முகமது ஷமி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் இல்லை என்று ஒருநாள் போட்டியில் இருந்து நேற்று திடீரென ஓய்வை அறிவித்த ஸ்டீவ் சுமித் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்திய அணி எங்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. எங்களை முற்றிலுமாக வெளியேற்றியது.

ஒரே நகரத்தில் (துபாய்) தங்கி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானது கிடையாது. அந்த அணி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இவ்வாறு ஸ்டீவ் சுமித் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *