சென்னை;
இயக்குநர் சுந்தர்.சி. தற்போது தயாரிக்க உள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம், ரௌடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன.
இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதல் பாகம் போல் அல்லாமல் இரண்டாம் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து படத்திற்கான பூஜை தொடங்குவதை முன்னிட்டு வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில், ‘மூக்குத்தி அம்மன்2’ திரைப்படத்திற்கான பூஜை இன்று விமர்சையாக நடைபெற்றது.
பூஜை விழாவிற்காக பிரம்மாண்டமான கோவில் போன்ற செட்டை அமைத்து யாகம் வளர்த்து பூஜை நடைபெற்றது. பூஜையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் சுந்தர்.சி., நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் ஹிப்ஆப் தமிழா இசையில் ஃப்ர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது. அதில் படத்தின் தலைப்பு மற்றும் படப்பிடிப்பு தொடங்கியது அறிவிக்கப்பட்டுள்ளது.
பூஜை விழா தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.