தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டு, தங்களை புதுப்பித்துக் கொள்ளும் புண்ணிய நாள் இந்த மாசி மகம்!!

கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி, சரயு, குமரி ஆகியன நவ நதிகள் என போற்றப்படுகின்றன.

புண்ணிய நதிகளாக போற்றப்படும் இந்த நதிகளில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பதால் ஆண்டு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த நதிகளில் புனித நீராடி, தங்களின் பாவங்களை போக்கிக் கொள்கிறார்கள். இதனால் புனித நதிகளான இவைகளில் அதிக பாவங்கள் சேர்ந்தன.

இதனால் கவலை அடைந்த இந்த நவ நதிகளும் சிவ பெருமானிடம் சென்று, தங்களிடம் சேர்ந்த பாவங்களை போக்கிக் கொள்ள என்ன வழி என கேட்டன. அதற்கு அவர், மக நட்சத்திரமும் பவுர்ணமியும் இணையும் மாசி மாதத்தில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் சென்று நீராடி உங்களின் பாவங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

அதன்படி நவ நதிகளும் கும்பகோணம் மகாமகம் குளத்தில் எழுந்தருளி, தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டு, தங்களை புதுப்பித்துக் கொள்ளும் புண்ணிய நாள் இந்த மாசி மகம்.


இதே போன்று வருண பகவானின் தோஷத்தை போக்கிய சிவ பெருமான், இந்த நாளில் யார் ஒருவர் நீர் நிலைகளில் நீராடுகிறார்களோ அவர்களின் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என வரமளித்த நாளும் மாசி மகம் தான்.

என்ன செய்ய வேண்டும்?
மாசி மகம் அன்று வாய்ப்பு இருப்பவர்கள் கும்பகோணம் மகாமகம் குளத்திற்கு சென்று, அதிகாலையில் நீராடி, கோவிலுக்கு சென்று வழிபடலாம். கும்பகோணம் செல்ல முடியாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆறு, கோவில் குளங்கள், நீர் நிலைகளில் நீராடலாம்.

மாசி மகத்தன்று அனைத்து நீர் நிலைகளிலும் இந்த புண்ணிய நதிகள் எழுந்தருள்வதாக ஐதீகம். அதனால் இந்த நீர்நிலைகளில் நீராடி, கும்பகோணம் குளத்தில் நீராடி பலனை பெறலாம்.
அதிகாலையில் நீராடிய பிறகு, அதே நீர் துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டும்.

திதி, அமாவாசை தர்ப்பணம் வழக்கமாக கொடுப்பவர்களாக இருந்தாலும், மாசி மகத்தன்று தவறாமல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதன் மூலம் இதுவரை அமாவாசை நாளில் விரதம் இருந்து திதி கொடுக்க தவறிய பாவம், தர்ப்பணம் கொடுக்கும் போது தெரிந்தும், தெரியாமல் செய்த பாவங்கள் என ஏழு தலைமுறைகளிலும் தெரியாமல் செய்த பாவங்கள் கூட தீரும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *