மேஷம்
சந்தோஷம் கூடும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். பணநெருக்கடிகள் அகலும். உத்தியோக முயற்சி வெற்றி பெறும்.
ரிஷபம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீட்டு தகவலை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மிதுனம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
வளர்ச்சி கூடும் நாள். உறவினர் வழியில் விரயம் ஏற்படலாம். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
சிம்மம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
கன்னி
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கடமையை செவ்வனே செய்து முடிப்பீர்கள்.
துலாம்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.
விருச்சிகம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு
ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வந்த வரன்கள் கைநழுவி செல்லலாம். கூட்டுத்தொழிலில் பிரச்சனைகள் ஏற்படும்.
மகரம்
கனவுகள் நனவாகும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். தொட்ட காரியத்தில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சு நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம்
வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். சுபச்செலவுகள் உண்டு. பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.
மீனம்
மகிழ்ச்சி குறையும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.