ஹோலி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்!!

திருப்பூர்:
திருப்பூரில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இந்தநிலையில் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.

திருப்பூர் வழியாக செல்லக்கூடிய டாட்டா நகர் மற்றும் தன்பாத் உள்ளிட்ட ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் சென்றனர். பலர் ரெயில்களில் இருக்கை இல்லாமல் படிகளில் அமர்ந்து சென்றனர்.

எனவே வடமாநில தொழிலாளர்களின் வசதிக்கேற்ப வடமாநிலங்களுக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *