சென்னை:
நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், “பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, ரூ. 12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்”
“1 லட்சம் ஏக்கரில், ரூ. 12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 15 கோடியில், 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும்”
“நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதிக உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருது வழங்க ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு.
நம்மாழ்வார் விருது திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும் “ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உழவர்களுக்கு கூடுதல் மானியம்.
தற்போதுள்ள 40% மானியம் 60%-ஆக உயர்த்தி வழங்கப்படும். இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ. 12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என கூறினார்.