தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும் – டிடிவி.தினகரன் நம்பிக்கை!!

திருச்சி:
தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை தர முடியும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

டாஸ்மாக் அலுவலகம், மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதுபோல, சென்னை மாநகராட்சியில் கழிப்பறைத் திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. இதுபோன்ற ஊழல்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவும் வர வேண்டும். அது பழனிசாமியுடனா, பழனிசாமி இல்லாமலா என்று தெரியாது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *